தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

1 Jun 2026, 11:40 pm
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்</strong></p><p>தருமபுரி ஜூன் 1- தருமபுரி மாவட்டத்தில் ஞாயிறன்று பெய்த மழை யின் காரணமாக குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்த தால் அவதியடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி நகரில் ஞாயிறன்று இரவு சுமார் 55 மில்லி மீட்டர் அளவு கனமழை பெய்தது. இதனால், தருமபுரி நகரத்தில் உள்ள சூடாமணி தெரு, குமாரசாமி பேட்டை, எஸ்.வி ரோடு உள்ளிட்ட நகர பகுதிகளில் நகரின் தாழ்வான பகுதியாகும். மேலும, ஆங்காங்கே கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறு போன்று சென்றது. ஆங்காங்கே ஏற்படும் அடைப்பு களை நகராட்சி நிர்வாகம் சரி செய்வதில்லை. இதனால் தருமபுரி நகரில் சிறு மழை செய்தாலும் தருமபுரி நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதி தெரு சாலைகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீட்டினுள் புகுந்து விடுகிறது. அப்பகுதி மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படும் பொழுது நக ராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்காததால் ஞாயிறன்று பெய்த கனமழையால் வீட்டினுள் மழை நீருடன் கழிவு நீரும் புகுந்தது. இதனையடுத்து ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் தருமபுரி நகராட்சி நிர் வாகத்தை கண்டித்து தருமபுரி- ஒகேனக்கல் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விரைவில் நடவ டிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் அறிவழகன், உதவி காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, சுந்தரமூர்த்தி பேச்சுவர்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.