சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலை: 8 பேர் கைது
29 Jun 2026, 12:34 am
<p><strong>சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலை: 8 பேர் கைது</strong></p><p>தருமபுரி, ஜூன் 28- தருமபுரி அருகே சொத்து தக ராறில் அக்கா மற்றும் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல் துறையி னர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கணபதிராமன் - சாலம்மாள் தம்பதிக்கு நாகம்மாள் (47), நஞ்சம் மாள் (45), மாதேஷ் (40) என இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்த னர். மூவருக்கும் திருமணமான நிலை யில், தகடூர் எர்ரப்பட்டி பகுதியில் தனித்தனியாக வசித்து வந்தனர். இதில், நஞ்சம்மாள் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். நாகம் மாளின் மகள் கீதாவை தாய்மா மனான மாதேஷ் திருமணம் செய்தி ருந்தார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ள நிலை யில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்குமிடையே, அப்பகுதி யிலுள்ள பூர்விக நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், தனியாக இருக்கும் நஞ்சம் மாளுக்கு, எதற்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் எனவும், அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என நாகம்மாள் குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர். இதில், லாரி ஓட்டுந ரான மாதேஷ் மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நஞ்சம்மாள் உதவியது டன், பராமரித்து வந்துள்ளார். இதன் காரணமாக, தனது பங்கு சொத்தில் சிறிதளவு நஞ்சம்மாளுக்கு மாதேஷ் வழங்கியுள்ளார். இது நாகம்மாள், இவரது மகளும் மாதே ஷின் மனைவியுமான கீதா, குடும் பத்தினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நஞ்சம்மாள் வீட் டில் இவரும், இவரது தம்பி மாதே ஷும் வியாழனன்று கொலை செய் யப்பட்டு இறந்துகிடந்தனர். இது தொடர்பாக, அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. கே.அருண் கபிலன் உத்தரவின் பேரில், தருமபுரி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, நாகம்மாள், அவரது மகளும் மாதே ஷின் மனைவியுமான கீதா உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், கீதா ஏற் பாட்டின்பேரில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் உதவியு டன் மாதேஷ், நஞ்சம்மாள் ஆகி யோரை கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாதேஷின் மனைவி கீதா (34), தருமபுரியை சேர்ந்த அவரது உறவினர்கள் பொன்னியம்மாள் (60), சண்முகம் (39), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கூலிப்படையினர் ஹரி ராமச்சந்திரன் (36), ஆறுமுகம் (39), ரங்கநாதன் (37), சந்துரு (26), ராஜா (எ) கோபிநாத் (42) ஆகிய 8 பேரை யும் போலீசார் சனியன்று கைது செய் தனர்.</p>
