தொழில் வரி விதிப்பை திரும்பப்பெறக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
19 Jun 2026, 12:25 am
<p><strong>தொழில் வரி விதிப்பை திரும்பப்பெறக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூன் 18- விசைத்தறி கூடங்களுக்கு நகராட்சி நிர் வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தொழில் வரி விதிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், உரி மையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி நகராட்சி, அன்னசாகரத்தில் குடிசைத் தொழிலாக நடைபெற்று வரும் விசைத்தறி கூடங்களுக்கு விதிக்கப்பட்ட, நக ராட்சியின் தொழிற்சாலை வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும். தொழில்வரி செலுத்தக்கோரி அனுப்பிய அறிவிக்கையை திரும்பப்பெற வேண்டும். வரியை செலுத் தக் கோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நிர்பந் தம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.</p>
