‘போக்சோ குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு!’
24 Jun 2026, 10:49 pm
<p><strong>‘போக்சோ குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு!’</strong></p><p>தருமபுரி, ஜூன் 24 - தருமபுரி வட்டம் காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், 7 வயதுச் சிறுவனை, கடந்த 16.07.2023-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பிரகாஷ் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணை முடித்து பிரகாஷ் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி எஸ். அசின் பானு, பிரகாஷைக் குற்றவா ளியாக அறிவித்து, இரட்டைத் தூக்குத் தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.</p>
