ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் விசாரணை
17 May 2026, 11:10 pm

ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் விசாரணை

தருமபுரி, மே 17- பிடமனேரி ஏரியில் டன் கணக் கில் மீன்கள் இறந்து மிதக்கும் சம்ப வம் குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டு களில் உள்ள நியூகாலனி, மாந் தோப்பு, ஜெட்டிஅள்ளி, பிடம னேரி, எம்ஜிஆர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட ஏழு வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பிடமனேரி ஏரி உள்ளது.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு வருடத்திற்கு ரூ.25 லட்சம் என மீன் பாசிமூலம் வருவாயை ஈட்டி தருகி றது.

அதேபோல் இரண்டு வருடத் திற்கு முன்பு ரூ.22 லட்சத்திற்கு மீன் பாசி குத்தகை ஏலம் விடப்பட்டது.

அதன்பின் 2025 ஆம் வருடம் ஏலம் விடாமல் ஏற்கனவே மீன் பாசி குத் தகையை எடுத்த குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்று வந்தார்.

இந்நிலையில், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் பிடமனேரி ஏரியை மீன் பாசி குத்தகை ஏலம் அறிவிக்காமல், ரகசியமாக மதி கோன்பாளையம் பகுதியை சேர்ந்த நபருக்கு மூன்று வருடத் திற்கு மீன் பாசி குத்தகையை விட் டுள்ளது.

குத்தகை நபர் தற்போது ஆறு மாத காலமாக மீன்பிடித்து விற் பனை செய்து வந்த நிலையில், ஞாயிறன்று காலை ஏரியில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந் துள்ளன.

ஏரியிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகே சென்று பார்த்த பொதுமக்கள், மீன்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனி, டீச்சர்ஸ் காலனி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நியூ காலனி, மாந்தோப்பு, காளியப் பசெட்டி காலனி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் ஏரியில் நேரடியாக கலந்து வருகிறது.

தற்போது மழை இல்லாததால் ஏரி தண்ணீர் மாச டைந்து துர்நாற்றம் வீசி வருவது டன் மீன்கள் இறந்து மிதப்பதால் கடு மையான துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய ஏற்பட்டுள் ளது.

இந்த தண்ணீரை பயன்படுத் தும் மனிதர்கள், கால்நடைகள், விலங்குகளின் உயிருக்கும் அபா யம் ஏற்படும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்த நிலையில், யாரா வது முன்விரோதம் காரணமாக தண் ணீரில் விஷம் கலந்தார்களா? அல் லது கழிவுநீரால் தண்ணீர் மாச டைந்து மீன்கள் இறந்தனவா? என்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.