முந்தய பக்கம்

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!

19 May 2026, 12:53 am
டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!

தருமபுரி, மே 18 – தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பொம்மிடி பகுதிகளில் பொதுமக்கள், மாணவிக ளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உட னடியாக அகற்றக் கோரி அப் பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 2835-இன் அருகே பள்ளி, கோவில், திரையரங்கு மற்றும் அரசு மருத்துவமனைச் சாலை அமைந்துள்ளன.

இங்கு மதுப்பிரி யர்களின் கலாட்டாவால் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதேபோல், பொம்மிடி - அரூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 2875-இன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பள்ளிவாசல் மற்றும் கோவில் உள்ளன.

இக்கடைக்கு வரும் மதுப் பிரியர்கள், வாரச்சந்தை மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதால், பெற்றோர் தங்கள் பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்களின் நலன் கருதி இந்த இரு டாஸ்மாக் கடைகளை யும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் தங்களது மனுக்களில் வலி யுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram