குளத்தை ஆக்கிரமிக்க முயற்சி: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
31 May 2026, 11:06 pm
<p><strong>குளத்தை ஆக்கிரமிக்க முயற்சி: தடுத்து நிறுத்த வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, மே 31- பாளையம்புதூர் கிராமத்தில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற் சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் மயானம் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, அருகே உள்ள விவ சாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிண றுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர கார ணமாக உள்ளது. சில வருடங்களாக குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் இருந் ததால், தற்பொழுது ஒரு சிலர் ஆக்கிர மித்து வருகின்றனர். இதனால் குளத் தில் தண்ணீர் நிரம்பாமல் வற்றிய நிலை யில் உள்ளது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கட்டிட கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி குளத்தை மூடி ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். குளத்தை தூர்வாரி, மழை நீர் தேங்கும் வண்ணம் சீர்படுத்த வேண் டும் என கிராம மக்கள் ஊராட்சி நிர் வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவ லகத்திலும் பலமுறை புகாரளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குளத்தில் கழிவுகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய் யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குளத்தில் கொட்டப்பட்டுள்ள மண் களை வெளியே எடுத்து சீரமைக்க அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.</p>
