மழைநீரை தேக்க தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
7 Oct 2026, 12:47 am
<p><strong>மழைநீரை தேக்க தடுப்பணை கட்ட வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, அக்.6-பாலக்கோடு அருகே, ஆண்டுதோறும் மழை காலங்களில் உப்புப்பள்ளம் ஆற்றில் வெளியேறும் ஒரு டிஎம்சி மழைநீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாலம், நாமகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெருங்காடு, சாஸ்திரமுட்லு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து மழைகாலங்களில் பாலக்கோடு பகுதி உப்புப்பள்ளம் ஆற்றுநீர் சின்னாறு வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் சுற்றுவட்டார பகுதியில் கரும்பு, வாழை, தென்னை, நெல், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவைகளை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். வறட்சிக்காலத்தில் விவசாயத்துக்கு தேவையான நீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், உப்புப்பள்ளம் ஆற்றின் குறுக்கே, போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் சின்னாற்றில் கலந்து வருகிறது. மழை காலங்களில் வெளியேறும் மழைநீரை சேமிக்கும் வகையில், உப்புப்பள்ளம் ஆற்றில் இருந்து செங்கன்பசுவந்தலாவ் ஏரிக்கு மழைநீரை கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து அரக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு உப்புப்பள்ளம் ஆற்றுநீரை விவசாயத்திற்கு சேமிக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
