ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல்
14 May 2026, 11:32 pm
<p><strong>ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல்</strong></p><p>தருமபுரி, மே 14- பாலக்கோடு அருகே ஒற்றை யானை நட மாடுவதால், கிராம மக்களிடையே வனத் துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச் சரகம் எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுகி றது. எனவே, இந்த காப்புக்காடு பகுதியை யொட்டி அமைந்துள்ள கொல்லஅள்ளி, வாழைத்தோட்டம், செங்கோடப்பட்டி காவே ரியப்பன் கொட்டாய், கூசுக்கல், எருதுகூட அள்ளி, பொப்பிடி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி கூட்டுச் சாலை, காட்டு மாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாலை 6.30 மணிக்கு பின்னர் வீட்டுக்கு வெளியில் நடமாடுவது, உறங்குவது, வயல் களில் உறங்குவது, வயல்களில் தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். யானைகள் நடமாட்டம் தெரியவந்தால் உடனே பாலக்கோடு வனச் சரக அலுவலக பணியாளர்கள் குழுவின ருக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக பாலக்கோடு வனச்சரக கார்த்தி கேயன் தலைமையிலான வனத்துறை குழு வினர், பாலக்கோடு பகுதியில் உள்ள கிரா மங்களில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் எச்ச ரிக்கை விடுத்து வருகின்றனர்.</p>
