தேங்கும் கழிவுகளால் நோய்த்தொற்று அபாயம்
14 May 2026, 11:33 pm
<p><strong>தேங்கும் கழிவுகளால் நோய்த்தொற்று அபாயம்</strong></p><p>தருமபுரி, மே 14- பாலக்கோட்டில் கழிவு நீர் கால்வாயில் தேங்கும் இறைச்சிக்கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உட னடியாக கால்வாயை சுத் தம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரி யம்மன் கோவில் வளாகம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகிறது. மேலும், இறைச்சிக்கழிவு கள், கால்வாயில் கொட்டப்பட்டு வருவ தால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்லாமல் தேங்கியுள்ள தால், புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கோவில் வளாகத்திற்குள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், சுற்றுப்பகுதியில் உள்ள கடை களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள் ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இது குறித்து கோவில் அதிகாரிகளிடம் முறையிட் டும், இதுவரை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சாக்கடை கால் வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
