தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஏற்பு: பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

24 May 2026, 1:04 am
மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஏற்பு: பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஏற்பு: பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

தருமபுரி, மே 23- தருமபுரி பழைய பேருந்து நிலை யத்திலிருந்து மாவட்ட அளவிலான பேருந்துகள் இயக்க வேண்டும் என் கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறி வித்துள்ளார். த

ருமபுரி பேருந்து நிலையம், நக ரின் மையப்பகுதியில் 1978 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.

இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து நகரப் பேருந்து களும், இன்னொரு பகுதியிலிருந்து புறநகர் மற்றும் நீண்ட தொலைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந் தன

இதனிடையே, நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க் கும் வகையில், தருமபுரியில் ஒரு தனி யார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில், நகருக்கு வெளியே கட் டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலை யம் அமைக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப் படுவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகருக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் மக் களின் உணர்வுகளை மதிக்காமல், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க மறுத்து, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் பேருந்தை இயக்கி வந்தது இந்நிலையில் தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட அளவில் செல்லும் பேருந்து களை இயக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக்குழு, மாவட்ட நிர்வாகத் திற்கும், தமிழக அரசையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இது தொடர்பாக வெள்ளியன்று தீக்கதிர் நாளிதழிலும் செய்தி வெளியாளது.

இந்நிலையில் சனியன்று (மே 23 ஆம் தேதியன்று) மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப் பில், பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகங்கள், மருத் துவமனைகள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் ஆகியவற்றிக்கு பொது மக்கள் எளிதில் சென்றடையும் வண் ணம், வெளி மாவட்டத்திற்கு, உதா ரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஒசூர் மற்றும் பெங்களுரு உள்ளிட்ட பேருந்துகள் நீங்கலாக ஏனைய உள் மாவட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் தருமபுரி நகர பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.