தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

8 Jan 2026, 2:44 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தருமபுரி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

தருமபுரி, ஜன.8- தருமபுரி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் புதனன்று ஆய்வு செய்தனர். குழுவின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் தலைமையில், இந்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதன்பின் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதியமான்கோட்டை காலபைரவர் கோவி லுக்கு சொந்தமான ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் நவீன வசதி கள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. விடுதி கட்டுமானப்பணி 80 சதம் நிறைவுற்றுள்ளது. மீதம் உள்ள  20 சதம் பணிகள் முடிக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதிக் குள் பொதுமக்களின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். அதைத்தொடர்ந்து, 100 ஆண்டு காலமாக ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்த இண்டூர் ஏரியின் எல்லை வரை யறை செய்யப்பட்டு, அதை சுற்றுலாத் தலமாக மாற்றுவ தற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் மொத்த பரப் பளவான 55 ஏக்கரில் ஒரு ஏக்கரில் குப்பைகளை தரம் பிரிப்பதற்கான திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற் கொள்வதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாய் - சேய் நலப்பிரிவில் 40 படுக்கை வசதிகள் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. இதர பிரிவிற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்பட வுள்ளது, என்றார். இந்த ஆய்வுகளின் போது, ஆட்சியர் ரெ.சதீஷ், பென்னா கரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சட்டமன்ற பேரவை  முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், துணைச்செயலாளர் ஸ்ரீரா.ரவி, சார்பு செயலாளர் த.பியூலஜா, நகர்மன்றத் தலை வர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நில மோடி வழக்கு: 2 பேர் கைது

தருமபுரி, ஜன.8- தருமபுரியில் நில மோசடி வழக்கில், ஆவண எழுத்தர் மற்றும் அவரது மனைவியை  காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). இவரது நண்பரும், ஆவண எழுத்த ருமான தருமபுரி நஞ்சன் தெருவைச் சோ்ந்த சரவண னிடம் (55) வீடுகட்ட நிலம் வேண்டும் என ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கு,  இலக்கியம்பட்டி, உங்கா ரனஅள்ளியில் தனது மனைவி மீனாட்சி (51) பெயரில் வீட்டு மனை உள்ளதாக கூறி, அந்த இடத்தை ரூ.3,85,000க்கு ரவிச்சந்திரனுக்கு சரவணன் பத்திரப்பதிவு செய்து கொடுத் துள்ளார். இந்நிலையில், கடந்த 2025 ஜனவரியில் வீடு கட்ட முடிவுசெய்த ரவிச்சந்தி ரன், அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளார். அப்போது  அங்கு தனது உறவினர்களு டன் வந்த ஜெயலட்சுமி என்ப வர், ‘தங்களது இடத்தை ஏன் சுத்தம் செய்கிறீர்கள்?’ என  கேட்டுள்ளார். அதற்கு, ரவிச் சந்திரன் அந்த இடத்தை வாங் கிய விவரத்தை கூறியுள் ளார். ஆனால், ஜெயலட்சுமி அந்த இடம் தன்னுடையது என ஆவணங்களைக் காட் டினார். இதுகுறித்து ரவிச்சந் திரன் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகத் தில் புகாரளித்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பி ரிவு காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், போலி ஆவணங்கள் மூலம்  வேறு ஒருவரது நிலத்தை சர வணனும், அவரது மனைவி மீனாட்சியும் சேர்ந்து ரவிச் சந்திரனிடம் விற்பனை செய் தது தெரியவந்தது. இதைய டுத்து, இருவரையும் போலீ சார் கைது செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

இயந்திர கோளாறால் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் தாமதம்

நாமக்கல், ஜன.8- பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட பகுதியில் உள்ள ஒரு சில நியாய விலைக்கடைகளில் பதிவு இயந்திர இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறால், பொங்கல் தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  தமிழக அரசு சார்பில் பொங்கல்  பண்டிகைக்கு நியாய விலைக் கடை களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்புடன் 3 ஆயி ரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட ஆவரங்காடு, சந்தைப்பேட்டை கண் டிப்புதூர் பகுதிகளில் செயல்படும் அரசு  நியாய விலைக் கடைகளில் வியாழ னன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கபட்டது. இதற்காக காலை 9 மணிக்கு குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு வருகை தந்தனர். இந்நிலை யில் காலை 10 மணி முதல் ஒரு சில  நியாய விலைக்கடையில் உள்ள பதிவு இயந்திரம் இணையதளம் நெட் வொர்க் கிடைக்காததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காலை நேரத்தில் வந்த உடனேயே பரிசு தொகுப்பை வாங்கிச் செல்லலாம் என நினைத்திருந்த விசைத்தறி தொழி லாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இதை யடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண் டும் இணையதளம் செயல்பட துவங்கி யது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு கடை ஊழியர்கள் வழங்கினர். இதுகு றித்து கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறும் பொழுது, இது வழக்கமாக ஏற்ப டும் இணையதள கோளாறு தான். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சர்வர் கள் இயங்குவதால் இதுபோல் ஏற்பட் டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தங்கு தடை இன்றி பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். குடும்ப அட்டைதாரர்களின் சிரமங் களை குறைக்க, ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேர் வரை டோக்கன் வழங்கப் பட்டு, பொங்கல் தொகுப்பு வழங்கப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்திற்குள் நுழைந்த 2 யானைகள்

தருமபுரி, ஜன.8- பாலக்கோடு அருகே உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி,  அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக் காடு பகுதிகளிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ் வப்போது ஊருக்குள் யானைகள் நுழைந்து விளைநிலங் களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், புதனன்று 2 யானைகள் உணவு தேடி பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராமப் பகுதியில் தஞ்சமடைந்தன. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தபோது, தோட்டத் திற்குள் யானைகள் நுழைந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர், இரு யானைகளை யும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை களை விரட்ட வனத்துறையினர் காடுகளைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலி மற்றும் அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.