முந்தய பக்கம்

ஜூன் 13இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

4 Jun 2026, 10:31 pm
ஜூன் 13இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
<p>தருமபுரி, ஜூன் 4-</p><p>தருமபுரியில் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் நீதிமன்றத்தை, வழக்குதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜோதி தலைமை வகித்தார். குடும்ப நல நீதிபதி அஸ்லீன் பானு, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்றவியல் நீதிபதி முகம்மது ரிஸ்வானுல்லா செரிப், முதன்மை சார்பு நீதிபதி ஞான பாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, சார்பு நீதிபதி தமயந்தி மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்னர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளுக்கு உரிய தீர்வு காணப்படும். இங்கு வழங்கும் தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய இயலாது. இங்கு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால், நீதிமன்றக் கட்டணம் வழக்குதாரர்களுக்கு திருப்பித் தரப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வழக்குதாரர்கள் சமரச தீர்வு காண்பதற்கான வாய்ப்புள்ள வழக்குகளுக்கு உரிய தீர்வுகளை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram