தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்

12 May 2026, 1:21 am
உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
<p><strong>உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, மே 11- நல்லம்பள்ளியில் உடைந்த ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்துள்ள சவுளூர் பகுதியில் தரைமட்ட ராட்சத நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத் தின் மூலம் வழங்கக்கூடிய தண்ணீர் தினமும் வருகின்றது. இத்தொட்டியி லிருந்து நல்லம்பள்ளி ஒன்றியத்திற் குட்பட்ட 15க்கும் மேற்பட்ட ஊராட்சி களுக்கு தேவையான குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது. இந்நிலையில், இத் தொட்டிக்கு தண்ணீர் வரக்கூடிய ராட்சத குழாய், குடுப்பட்டி மேம்பா லம் தேசிய நெடுஞ்சாலையோரம் எச்பிசிஎல் நிறுவன கட்டிடத்திற்கு அருகாமையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு உடைந்தது. இதனால் பல மாதங்களாக உடைந்த குழாயி லிருந்து தினமும், 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில், அதிகப்படியான தண்ணீர் தேசிய நெடுஞ்சாலையோரம் தேங்கி, குளமாக மாறி வருகிறது. இதனை பயன்படுத்தி, அருகில் கட்டிட வேலை செய்து வரும் நபர் கள் தேங்கி நின்ற இடத்தில் திடீர் குழாய் அமைத்து ஒரு மாதத்திற்கு மேலாக கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேலும், தண் ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர் கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, உட னடியாக உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.