தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியரின் உத்தரவை மதிக்காத நகராட்சி நிர்வாகம் நான்கு கட்டமாக போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

28 May 2026, 11:03 pm
ஆட்சியரின் உத்தரவை மதிக்காத நகராட்சி நிர்வாகம் நான்கு கட்டமாக போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

ஆட்சியரின் உத்தரவை மதிக்காத நகராட்சி நிர்வாகம் நான்கு கட்டமாக போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

தருமபுரி, மே 28- தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத தருமபுரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது.

தருமபுரி நகராட்சியில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்க ளின் கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவைக்கூட்டம் சார்பில், சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத்தலை வர் சி.கவிதா, மாவட்ட இணைச் செயலாளர் லில்லி புஷ்பம், சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் சி.குட்டியப்பன், நிர்வாகிகள் சத்யா, மணிகண்டன், முனியப்பன், செல்வ ராஜ், சிவா, சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தருமபுரி நக ராட்சியில் அரசாணை அளவுகோ லின் படி சுமார் 241 தூய்மைப் பணி யாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது நகராட்சியின் நேரடிப் பணியாளர்களாக 60 பேரும், மீதம் 131 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய் கின்றனர்.

தூய்மைப்பணி வாகன ஓட்டுநர்களும் ஒப்பந்தப் பணி யாளர்களாக உள்ளனர். அவுட்சோர்சிங் முறையில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்க ளுக்கு தினக்கூலியாக ரூ.410 வழங்கப்படுகிறது.

இத்தொழிலா ளர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட் சியர், கடந்த ஓராண்டுக்கு முன் கூடுதலாக ரூ.131 வழங்கி, மொத் தம் ரூ 541 தினக்கூலியாக வழங்க உத்தரவிட்டார். ஆனால், 13 மாதங் களாகியும் உயர்த்தப்பட்ட ஊதி யத்தை நகராட்சி நிர்வாகம் வழங்க வில்லை. மேலும், சிஐடியு சார்பில் அவுட்சோர்சிங் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு ஊதியம் தொடர் பாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது.

தூய் மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.745 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தர வையும் தருமபுரி நகராட்சி நிர்வா கம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், தூய் மைப் பணியாளர்களுக்கு பாது காப்பு கவசங்கள், தளவாடப் பொருட் களும் வழங்கவில்லை.

எனவே, தூய்மைப் பணியா ளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத் தரவிட்ட தினக்கூலி ரூ.541 வழங்க வேண்டும்.

ஒப்பந்தப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 9 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்; இரண்டாம் கட்டமாக ஜூன் 16 அன்று தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா; மூன்றாம் கட்டமாக ஜூன் 22 அன்று நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாநிலை இயக்கம்; நான்காம் கட்டமாக ஜூன் 29 அன்று வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.