2 ஆம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரம்
13 May 2026, 11:08 pm
<p><strong>2 ஆம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரம்</strong></p><p>தருமபுரி, மே 13- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 ஆம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்கு, ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகின்றன. தருமபுரி நகராட்சியில் 33 வார்டு கள் உள்ளன. இதில் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு, தமிழக அரசு தருமபுரி நக ராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் மூலம் ரூ.32 கோடி யில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்ட மாக 19 வார்டுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை திட்டக்கழிவு நீரை ஒருங்கிணைத்து, மதிகோன் பாளையம் மற்றும் காந்திபாளை யத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மதிகோன் பாளையம் - அரூர் பிரிவு சாலை யில், பாதாள சாக்கடை கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. இங்கு தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய் யப்பட்டு, வண்டல் படிவம் சேக ரித்து வைக்கப்படுகிறது. சுத்திக ரிப்பு செய்யும் கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில், நகராட்சியில் விடுபட்ட 14 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய் தது. இதையடுத்து, நகராட்சியில் புதியதாக பாதாள சாக்கடை திட் டம் (பகுதி -2) ரூ.82.15 கோடியில் நடைபெற்று வருகிறது. 14 வார்டு களில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் பாதாள சாக்கடை சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுபோக ஏற்கனவே விடுபட்ட 3 வார்டுகளி லும் என மொத்தம் 17 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தருமபுரி - திருப்பத்தூர் சாலை, மதிகோன் பாளையம், ரெட்டிராயன் ஏரிக்கரை அருகே, பாதாள சாக்கடை திட்டத் திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
