சேதமடைந்த சாலையை சீரமைத்துத்தர வலியுறுத்தல்
8 Jul 2026, 1:19 am
<p><strong>சேதமடைந்த சாலையை சீரமைத்துத்தர வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, ஜூலை 7- குட்டூரிலிருந்து ஆவாரங்காட்டூர் செல் லும் சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், குட்டூரிலிருந்து ஆவாரங்காட்டூர் வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப் பவர்கள் விவசாயத் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி, சாமந்தி, சோளம், கம்பு போன்ற மகசூல்களை, இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங் கள் மூலம் தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். மேலும், இப்பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெங்கட் டம்பட்டி, தம்மணம்பட்டி அரசுப்பள்ளிகளி லும், தருமபுரி மற்றும் வெளியூரிலுள்ள கல் லூரிகளிலும் படித்து வருகின்றனர். இந்நிலை யில், ஆவாரங்காட்டூரில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை குண்டும், குழியு மாக காணப்படுகிறது. இச்சாலையை சீர மைக்க ஜல்லி கொட்டப்பட்டு, பல மாதங்களா கியும் சாலை அமைக்கப்படவில்லை. எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
