தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் வழங்கிய குறவர் சமூக மக்களுக்கு மாற்று வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
3 Jul 2026, 1:33 am
<p><strong>தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் வழங்கிய குறவர் சமூக மக்களுக்கு மாற்று வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, ஜூலை 2- குறவர் சமூக மக்களுக்கு வழங்கப் பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத் தில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பட்டதால், மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி நகரின் பல்வேறு பகுதிக ளில் வசித்து வந்த பட்டியலின குறவர் சமூக மக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதனடிப்படையில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்.6 ஆம் தேதி தருமபுரி ஒன்றியம், விருப்பாட்சி புரம் கிராமத்தில் 32 பேருக்கு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதன்பின், தருமபுரி – ராயக்கோட்டை – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற் காக அந்த நிலம் அரசால் கையகப்படுத் தப்பட்டது. ஏழை மக்களுக்காக வழங் கப்பட்ட வீட்டுமனை நிலத்தை அரசு எடுத்துக்கொண்ட போதிலும், இது வரை அவர்களுக்கு மாற்று வீட்டுமனை வழங்கப்படவில்லை. குறவர் சமூக மக்கள் வீட்டு வேலை மற்றும் தினக்கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாடகை வீடு களில் வசித்து வரும் இவர்களுக்கு சொந்த வீடு என்பது அவர்களுக்கு எட் டாக்கனியாக மாறியுள்ளது. மேலும், தருமபுரி நகரம், சத்யா நகர், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் குறவர் சமூக குடும்பங்களும் வீட்டு மனை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற னர். அவர்கள் வருவாய்த்துறை அதி காரிகளிடம் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்துள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிலம் வழங்கிய குடும்பங்களுக்கும், நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் குறவர் சமூக மக்களுக்கும் நகரத்திற்கு அருகில் மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, புதிய குடியிருப்பு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இந்த கோரிக்கை மனுவை தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தர்மலிங்கம், மாவட்ட துணைச்செயலா ளர் கே. ராமன், மாவட்ட துணைத்தலை வர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் மஞ் சுளா, அஸ்வினி, குமுதம், அமுதா ஆகி யோர், தருமபுரியில் மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன் ஆகியோரிடம் வழங்கினர்.</p>
