சாலையோரமுள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்
6 Nov 2026, 12:54 am
<p><strong>சாலையோரமுள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்</strong></p><p>தருமபுரி, நவ.5-காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி நெடுஞ்சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம் உள்ளதால், தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்திலிருந்து பந்தாரஅள்ளி ஏரிக்கரை வழியாக திப்பம்பட்டி, காரிமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை உள்கோட்ட அலுவலகம் கட்டுப்பாட்டில் வரும் இச்சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இச்சாலையில், பந்தாரஅள்ளி ஏரிக்கரையின் தெற்குப்பகுதியில் உள்ள சாலையோரம் திறந்தவெளி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் ஓரம் உள்ள சாலையில் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச்சுவா் கட்டப்பட்டிருந்தது. இந்த சுவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால், கிணறு அமைந்துள்ள பகுதியில் சாலையின் ஒரு பகுதி அப்போதே சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனை சரிசெய்யும் வகையில், அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிக ஏற்பாடாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சாலை சரி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில், தற்போது இந்த மணல் மூட்டைகள் அண்மையில் பெய்த மழையால் மீண்டும் சரிந்து கிணற்றில்விழுந்துள்ளது. இதனால் தற்போது தற்காலிக தடுப்புமின்றி, அந்த சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் கிணறு திறந்து வெளியில் அமைந்துள்ளதாலும், மேலும் வரும் நாட்களில் தொடா்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் மீண்டும் இச்சாலை சேதமடைந்த வாய்ப்புள்ளது. எனவே, பந்தாரஅள்ளி சாலையோரம் உள்ளதிறந்தவெளி கிணற்றுக்கு, வாகன ஓட்டிகள் நலன்கருதி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
