வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர், மாணவர் விரோதப்போக்கு ஆசிரியர் சங்கங்கள் புகார்
3 Oct 2026, 1:36 am

வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர், மாணவர் விரோதப்போக்கு

ஆசிரியர் சங்கங்கள் புகார்

தருமபுரி, அக்.2-தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கடத்தூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் பச்சியப்பனின் ஆசிரியர் மற்றும் மாணவர் விரோதப்போக்கை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் அனைத்து ஆசிரியர் சங்கங்கள்சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்,முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது.அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாக வர வேண்டிய 14 வகையானவிலையில்லா கல்வி உபகரணங்களை, வட்டார கல்வி அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுச் செல்லுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஜி.அண்ணாலம்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆய்வின்போது, அங்குள்ள தூய்மைப் பணியாளரின் மகளிடம் ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசியதாகவும், தூய்மைப் பணியாளரின் செல்போனை பிடுங்கிப் பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பள்ளி நேரத்தில் தலைமை ஆசிரியரை தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப 8 கி.மீ தொலைவிலுள்ள அரூருக்கு அனுப்பி வைத்ததுடன், ஆய்வு என்ற பெயரில் மாணவர்களின் தலைமுடியை பிடித்து இழுப்பது, கொட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். மாலை 6 மணி வரை மாணவர்களையும் ஆசிரியர்களையும் காத்திருக்க வைப்பதும்,சத்துணவு மற்றும் காலை உணவு சமையல் பணியாளர்களை வேலை நேரத்திற்கு பிறகு வரவழைத்து அவமதிப்பதும் தொடர்கிறது.

இவரது கெடுபிடிகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக கடத்தூர் ஒன்றியத்தில் இதுவரை 5 ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதுகாப்பானபணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.