ஊதியம் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
11 Jun 2026, 11:12 pm
<p><strong>ஊதியம் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூன் 11- தருமபுரி அரசு மருத்துவமனை யில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு மாத ஊதியம் வழங்கா ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில், கடந்த 13 வருடங்களாக தூய்மைப் பணியா ளார்கள் சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். தற்போது கிறிஸ்டைல் என்ற தனியார் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் தினக்கூலி யாக பணியாற்றி வருகின்றனர். சுமார் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக் கூலியாக ரூ.355 வழங்கப்படுவதை கணக்கிட்டு, மாதம் ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. மூன்று சிப்ட்டாக தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோன்று 65 காவலர்கள் மூன்று சிப்டுகளிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வார விடுப்பு இல்லை. வேலைக்கு வந்தால் மட் டுமே சம்பளம் என்ற நிலை உள்ளது. வழக்கமாக மாதத்தின் 7 ஆம் தேதிக் குள் சம்பளம் வழங்கப்படும். இந் நிலையில் கடந்த மே மாதம் 15 தேதிக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 11 ஆம் தேதியாகியும் ஊதியம் வழங்கவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். எனவே, மாதத் தின் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். வார விடுப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவ மனை நிர்வாகமே மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தூய்மைப் பணியாளர் சங் கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்து கொண்டனர்.</p>
