முந்தய பக்கம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் மறியல்

22 May 2026, 11:44 pm
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் மறியல்
<p><strong>பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் மறியல்</strong></p><p>தருமபுரி, மே 22- அரூர் அருகே பொதுப் பணித்துறைக்கு சொந்த மான பாதையை ஆக்கிரமித் துள்ளதாக புகார் தெரிவித்து, பொதுமக்கள் வியாழனன்று மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கெளாப் பாறை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (44) என்ப வர், உடல்நிலை பாதிப்பால் புதனன்று உயிரி ழந்தார். இவரது உடலை எடுத்துச்சென்று. அடக்கம் செய்ய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மொல்லன் ஏரி கால்வாய் பகுதியில் இருந்த முட்புதர்களை அகற்றி, பாதை வசதியை கிராம மக்கள் ஏற்படுத்தி னர். இப்பாதையை ஆக்கிரமித்துள்ள அப்ப குதியை சேர்ந்த நபர், உடலை எடுத்துச் செல்ல முடியாதவாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், அரூர் - சித்தேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அரூர் துணை காவல் கண் காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் வரு வாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக் கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram