தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியர் பங்கேற்ற கிராம சபையில் பரபரப்பு 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி செயலர் முற்றுகை

5 Jun 2026, 10:23 pm
ஆட்சியர் பங்கேற்ற கிராம சபையில் பரபரப்பு 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி செயலர் முற்றுகை

தருமபுரி, ஜூன் 5-

பாளையம்புதூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி செயலரை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட் சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பு வளா கத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். மக்க ளின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களாக பெற்று, விரைந்து தீர்வுகாண, துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார். இதன்பின், ஆட்சியர் மற்றொரு நிகழ்ச்சிக்காக கிளம்பிய சற்று நேரத்திலேயே, பாளையம்புதூர் ஊராட்சி, தொம்பரகாம்பட்டியை சேர்ந்த திர ளான பெண்கள் ஒன்றிணைந்து, 100 நாள் வேலை கேட்டு அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஊராட்சி செயலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கிராம சபை கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த பேனர் கள் மற்றும் தரைவிரிப்புகளை அவசர அவசர மாக அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

100 நாள் வேலை கேட்டு வந்த மகளிர், அங்கிருந்த ஊராட்சி செயலர் கஜேந்திர னிடம், கேட்டபோது, வேலையெல்லாம் கிடையாது, கிராம சபை முடிந்து விட்டது எனவும், பெண்களை பார்த்து ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பெண்கள், கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு தான், துவங்கி நடக்கும் என நம்பி வந்து, எங்க ளது கோரிக்கை குறித்து உங்களிடம் கேட் டால், எங்களை பார்த்து ஒருமையில் பேசி விரட்டுகிறீர்கள் என, ஊராட்சி செயலர் கஜேந் திரனை, பெண்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் அவர், மீண்டும் பெண்களை விரட்டும் நோக்கி லேயே செயல்பட்ட சம்பவத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மனுவாக கொடுத்து முறையிடுங்கள் என கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.