தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவக்கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அச்சம்

12 Jun 2026, 10:27 pm
மருத்துவக்கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அச்சம்
<p><strong>மருத்துவக்கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அச்சம்</strong></p><p>தருமபுரி, ஜூன் 12- தருமபுரி அரசு மருத்துவமனையில் மலைபோல் தேங்கும் மருத்துவக்கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மருத்துவர்கள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறை, கவச உடைகள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரஞ்சி, மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் உணவு பொட்டலங்கள், துணி உள்ளிட்டவை மருத்துவமனை வளாகத்தில் ஒரு நாளைக்கு ஒரு டன் அளவு கொட்டப்பட்டுகிறது. இந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கியுள்ளது. தினமும் மருத்துவக்கழிவுகளை லாரியில் ஏற்றி வெளியில் சென்று அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், மாதத்திற்கு ஒரு முறைதான் மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தற்காலிகமாக குடோன் போன்று உருவாக்கி, அதில் கொட்டுகின்றனர். இந்த குடோன் முன்பு தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நாட்கணக்கில் மலைபோல் தேங்கும் மருத்துவக் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நோயாளிகளுடன் வரும் பாதுகாவலர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. சாலையில் நடந்து மற்றும் வாகனத்தில் செல்வோரும் அந்த மருத்துவக்கழிவு குடோனை கடக்கும் போது, துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை தினந்தோறும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.