தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவமனையில் மின்தூக்கி இயங்காததால் கடும் அவதி

19 Jun 2026, 12:06 am
மருத்துவமனையில் மின்தூக்கி இயங்காததால் கடும் அவதி
<p><strong>மருத்துவமனையில் மின்தூக்கி இயங்காததால் கடும் அவதி</strong></p><p>தருமபுரி, ஜூன் 18- தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில், மின் தூக்கி (லிப்ட்) இயங்காததால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இம்ம ருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக் கும் சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இம்மருத்துவ மனையில் சுமார் 500 படுக்கை வசதி கள் உள்ளன. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற் றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், எலும்பியல், கண் மருத்து வம், காது-மூக்கு-தொண்டை அவ சர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. தினசரி சுமார் 1,500 முதல் 2,500 வரை புறநோயாளி கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 350 முதல் 500 வரை உள்நோயாளி கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரு கின்றனர். 500 படுக்கை கொண்ட 5 மாடி கட்டிடத்தில் 6 மின்தூக்கி கள் (லிப்ட்கள்) இயங்கி வந்தன. இதன்மூலம் நோயாளிகள், பாது காவலர்கள், மருத்துவர்கள், மருத் துவமனை ஊழியர்கள் எளிதாக சென்று வந்தனர். தற்போது அனைத்து மின்தூக்கிகளும் பழுத டைந்து விட்டன. இதனால் முதியவர்கள் மற்றும் படுக்கையிலுள்ள நோயாளிகளை அழைத்துச் செல்ல பொதுமக் கள் பெரும் சிரமத்தை எதிர்கொள் கின்றனர். உடைமைகள், உணவுப் பொருட்களை நோயாளிகளுக்கு எடுத்துச் செல்ல 5 மாடிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, நோயா ளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, மின்தூக்கிகளை சரி செய்து, இயக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.