தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க 11 குழு அமைப்பு

21 May 2026, 12:34 am
வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க 11 குழு அமைப்பு
<p><strong>வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க 11 குழு அமைப்பு</strong></p><p>தருமபுரி, மே 20- தருமபுரி மாவட்டத்தில் வனப் பகுதிகளிலிருந்து உணவு, தண்ணீர் தேடி வெளியே வரும் யானைகளை கண்காணிக்க, வனத்துறை சார்பில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. தருமபுரி மாவட்டத்தில் 8 வனச் சரகங்கள் உள்ளன. இதில் பாலக் கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் யானைகள் நட மாட்டம் உள்ளது. காவிரி, சின்னாறு படுகை பகுதிகள் யானைகளின் வாழ்விடமாக உள்ளது. மேலும், காவிரியின் மறு கரைப்பகுதியில் கர்நாடகா மாநிலம் உள்ளதால், அங்கிருந்தும் யானைகள் கூட்டம் அடிக்கடி தமிழக எல்லைக்குள் இடம் பெயர்கின்றன. கோடை காலத்தில் வறட்சி நிலவுவதால் யானைகளுக்கு வனப்பகுதியில் போதிய உணவு, குடிநீர் இல்லாத தால், அருகில் உள்ள குடியிருப்புக் குள் உணவு, குடிநீர் தேடி அவ்வப் போது வெளியே வருகின்றன. கர்நா டகா யானைகள் மாதேஸ்வரன் மலை, உரிகம், ஜவளகிரி, தேன்க னிக்கோட்டை, ராயக்கோட்டை வழியாக பாலக்கோடு, ஒகேனக் கல், பென்னாகரம் வனப்பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு யானைகள் வரும் போது வனத்தை ஒட்டி யுள்ள கிராமங்களுக்குள் நுழை கின்றன. இதனால், கிராம மக்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே நடமாட வேண்டாம். வயல் வெளி களில் காவலுக்கு சென்று படுக்க வேண்டாம். பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வயலுக்கு இரவில் செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத் துறையினர் தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஒகேனக்கல் வனப்ப குதி சாலையில் அடிக்கடி ஒற்றை யானை நிற்பதை காணமுடிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் சாலையில் பயணிக் கும் நிலை உள்ளது. ஒகேனக்கல் லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையோரங்களில் வாகனங் களை நிறுத்த வேண்டாம் என எச்ச ரிக்கை செய்யப்படுகிறது. யானை கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, வனக்கோட்டத்தில் 13 பகுதிகள் வேட்டை தடுப்பு முகாம் கள் உள்ளன. யானைகள் நடமாட் டம் கண்காணிக்கப்பட்டு வருகி றது. யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதை கண்கா ணித்து, மீண்டும் வனத்திற்குள் விரட்டுவதற்கு, தனியாக கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டுள் ளது. ஒரு குழுவிற்கு 5க்கும் மேற் பட்டோர் உள்ளனர். குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெளிச்சம் தரக்கூடிய நவீன டார்ச் லைட் வழங்கப்பட்டுள் ளது. பாலக்கோடு வனச்சரகத் தில் 5 குழுவும், ஒகேனக்கல், பென் னாகரம் வனச்சரகத்தில் தலா 3 குழு வும் என மொத்தம் 11 குழுக்கள் யானைகள் நடமாட்டத்தை கண்கா ணிக்க ஈடுபட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.