தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக

22 May 2026, 11:32 pm
கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக

கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக

தருமபுரி, மே 22- வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு வனத்துறையினர் அபராதம் விதிப்பதை கைவிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரெ. சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் வெள்ளியன்று நடைபெற் றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் கரும்பு சாகுபடியில் விவ சாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.

கரும்பு சாகுபடிக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து அதிக ரித்து வரும் நிலையில், கொள்மு தல் விலை விவசாயிகளுக்கு கட் டுப்படியாவதாக இல்லை.

எனவே, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்புக்கு விலை நிர்ண யிக்கும் குழுவில் விவசாயிகளை இடம்பெற செய்ய வேண்டும்.

தற் போது அரவை முடிந்த கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்க வேண் டும்.

மஞ்சள் மற்றும் கடலை சாகு படி அதிகரித்துள்ள நிலையில், விவ சாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

பாலக்கோடு, பென்னா கரம், ஒகேனக்கல் வனப்பகுதிக ளில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படும் 25 ஆயிரம் நாட்டு மாடு கள் மேய்கின்றன.

வனப்பகுதிக் குள் இந்த மாடுகள் செல்லும் போது வனத்துறையினர் அபராதம் விதிக் கின்றனர்.

இவ்வாறு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் 3 ஆம் கட்ட குடிநீர் திட்டப்பணிகள், ஒகேனக்கல் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகியவற்றை விரைவாக தொடங்க வேண்டும்.

மாவட்டத்தில் செயல்படும் 26 உழ வர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளில் உறுப்பினர்களாக உள்ள விவ சாயிகளுக்கு ஆலோசனைக் கூட் டத்தை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

வரட்டாறு அணையின் பாசன விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, அந்த அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும், என விவசாயிகள் வலியு றுத்தினர்.

இதன்பின் ஆட்சியர் பேசுகை யில், ஒகேனக்கல் குடிநீரை கூடுத லாக வழங்குவதற்கு 3 ஆம் கட்ட குடிநீர் திட்டத்தை ரூ.8651 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில அர சின் நிதி, ஜப்பான் நாட்டின் நிதியு தவி ஆகியவற்றுடன் ஒன்றிய அரசு நிதி ரூ.2286 கோடியை பெற்று பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

உரிய நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

இதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல் படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் குறித்தும் ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.

வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் மேயும் மாடுகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக் கையை வனத்துறையினர் தவிர்க்க அறிவுறுத்தப்படும், என்றார்.

இக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் கவிதா உட்பட துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.