கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
10 May 2026, 12:34 am

கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, மே 9- கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில், வறண் டுள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் வாணியாறு அணை, வள்ளிமதுரை அணை கால்வாய்கள் மூலம் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள சில ஏரிகளுக்கு நீர்வரத்து உள்ளது.

மேட்டுப்பாங்கான பகுதியிலுள்ள கடத்தூர், ராமி யம்பட்டி, மொரப்பூர், சிந்தல்பாடி, பெத்தூர், தீர்த்தமலை, கம் பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏரிகள் மற்றும் குட்டைகள் உள் ளன.

இவற்றிற்கு எவ்வித நீர் ஆதாரங்களும் இல்லாததால் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ளன. கடந்த வருடம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.

மேலும், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்கள் முழுவ தும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும், ஏரிகளில் முழுமையாக ஆக்கிரமித்து இருக்கும் சீமை கருவேல மரங்களாலும், வறண்ட நிலையிலேயே ஏரிகள் உள்ளன.

எனவே, கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில், நீரின்றி வறண்டு இருக் கும் ஏரிகளில், சீமை கருவேல மரங்கள் மற்றும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.