தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

26 Sept 2026, 1:13 am
தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
<p><strong>தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, செப்.25-தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சரவணன்தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், கரும்பு சாகுபடி பரப்பளவுகுறைந்துள்ளது. இதனால் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கரும்பினை கொண்டு வந்து, ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் தருமபுரி மாவட்டத்தில் கரும்புசாகுபடிபரப்பளவை அதிகரிக்க முடியும். கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>மேலும், நாட்டு மாடு வளர்ப்பினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல வனப்பகுதிகளில் மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளுக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரிக்கு வைக்கோல் கொண்டு வரப்பட்டு, கூடுதல்விலைக்கு விற்கப்படுகிறது. வைக்கோலை அரசு கால்நடை மருத்துவமனைகள் மூலம் குறைந்த விலைக்குவழங்க வேண்டும், என்றனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, பாலக்கோடு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மேனகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், வேளாண் இணை இயக்குநர்பழனிசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.