வரதட்ணைக் கொடுமை: உறவினர்கள் சாலை மறியல்
3 Jun 2026, 10:36 pm
<p><strong>வரதட்ணைக் கொடுமை: உறவினர்கள் சாலை மறியல்</strong></p><p>தருமபுரி, ஜூன் 3- வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்யும் கணவர், அவரது குடும்பத்தி னர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, குடும்பத்தினருடன் இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா (19). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சேகர் என்பவ ரின் மகன் நவீன்ராஜுக்கும் கடந்தாண்டு ஆக.18 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. அப்போது, நவீன் ராஜுக்கு 5 சவரன் நகை வரதட்சணை யாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நவீன்ராஜ் மற்றும் அவரது தந்தை சேகர், தாய் தாமரைச் செல்வி, உறவினர் முகில் பிரபா உள் ளிட்டோர் தீபிகாவிடம் தங்க நகைகள், கார் உள்ளிட்டவற்றை வரதட்சணை யாக கேட்டு கொடுமைப்படுத்தியுள்ள னர். இதுகுறித்து அரூர் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் தீபிகா புகார ளித்துள்ளார். ஆனால், அதன்மீது போலீ சார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீபிகா உள்ளிட்ட அவரது உறவினர்கள் செவ்வாயன்று அரூர் - தருமபுரி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மகளிர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என போலீசார் உறுதியளித்த தையடுத்து, மறியலை கைவிட்டனர். இதுகுறித்து அரூர் மகளிர் காவல் துறை யினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
