தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்</strong></p>
<p>தருமபுரி, ஏப்.6- திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பா ளர்கள் திங்களன்று வேட்புமனுக்களை தாக் கல் செய்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜி. கே.எம்.தமிழ்குமரன் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று தேர்தல் நடத்தும் அலு வலர் கோபு-விடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக வர்த்தகர் அணி மாநில துணைச்செயலாளர் தர்மச்செல்வன், காங் கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ். கலைச்செல்வம், விசிக மாவட்டச் செயலா ளர் கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்த னர். தருமபுரி – இளங்கோவன் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர் காய்த்ரி-யிடம் வேட்புமனுத்தாக்கல் செய் தார். திமுக நகரச் செயலாளர் நாட்டான் மாது, விசிக மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டி யன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராம தாஸ், வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். அரூர் – சண்முகம் அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அ.சண் முகம், தேர்தல் நடத்தும் அலுவலர் செம் மலை-யிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், திமுக கிழக்கு மாவட்டச் செய லாளர் ஆ.மணி எம்.பி., சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், விசிக மாவட்டச் செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா, கொம தேக நிர்வாகி இளங்கோ ஆகியோர் உடனி ருந்தனர்.</p>
