பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: சிபிஎம் வரவேற்பு
8 Feb 2026, 3:55 pm
<p><strong>பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: சிபிஎம் வரவேற்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.8- பல்வேறு தரப்பினரின் கோரிக் கையை ஏற்று, ஏற்கனவே செயல் பட்டு வந்த தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள் ளது. தருமபுரி புதிய பேருந்து நிலை யத்திற்கு பேருந்துகள் செல்வ தால், அனைத்து தரப்பினருக்கும் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற் கான ஆய்வுக்கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப் பட்ட நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிச லால், வாகன ஓட்டிகள் பெரும் சிர மத்திற்குள்ளாகிள்ளனர். இந்த சிர மத்தை குறைக்கவும், சிறு வியா பாரிகள், பொதுமக்கள் ஆகியோ ரின் நலனை கருத்தில் கொண்டும் திங்களன்று (இன்று) முதல் திருப் பத்தூர், திருவண்ணாமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்து களும், நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய, ஏற்கனவே இயங்கி வந்த புறநகர் பேருந்து நிலையத்தி லிருந்து இயக்கப்படும். மேலும், அரசு நிர்ணயித்த பேருந்து கட்ட ணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூ லித்தால் மோட்டார் வாகன சட்டப் படி உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் பல் வேறு பகுதிகளுக்கு இயக்கப்ப டும் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா-க்கள் கட்டணத்தை முறைப்படுத்த வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் மற்றும் போக்கு வரத்து காவல் துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், வருவாய் கோட்டாட் சியர் காயத்ரி, வட்டாரப் போக்குவ ரத்து அலுவலர் சி.க.ஜெய தேவ்ராஜ், நகராட்சி ஆணையர் இரா.சேகர், தனியார் பேருந்து உரி மையாளர் சங்க நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் வரவேற்பு இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன் வெளியிட் டுள்ள அறிக்கையில், தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலி ருந்தும் பேருந்துகள் இயக்கப்ப டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மேலும், பேருந்துகள் தற்காலிக மாக மாற்றப்படுவதற்கு மாறாக நிரந்தரமாக மாற்ற வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலி ருந்து புதிய பேருந்து நிலையத் துக்கு குறைந்த கட்டணத்தில் கூடு தல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். சேலம் - பெங்களூரு விரைவுப் பேருந்துகள் அனைத் தும் புதிய பேருந்து நிலையத்தின் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
