முந்தய பக்கம்

சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை

6 Nov 2026, 12:55 am
சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை
<p><strong>சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை</strong></p><p>தருமபுரி, நவ.5-கூட்டுறவு அங்காடிகளில் சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை வியாழனன்று துவங்கியது.தீபாவளியை முன்னிட்டு, தருமபுரி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அதியமான் கூட்டுறவு சுயசேவைப் பிரிவில்,பொதுமக்கள் அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெறும் வகையில், ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு’ விற்பனை வியாழனன்று துவங்கிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.த.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram