தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 Sept 2026, 11:59 pm
தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து  போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.22-போக்குவரத்து தொழிலாளர்களிடம் அநாகரிகமாகவும், மரியாதை குறைவாகவும் நடந்து கொள்ளும் அதிகாரிகளை கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலத்தில், ஒரு நாள் விடுப்புக்கு கிளை மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும். தொழிலாளர்களிடம் அநாகரிகமாகவும், மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்தம், சட்டம் மற்றும் பொது நிலையாணை விதிகளுக்கு புறம்பாக தண்டனைகள் வழங்கக்கூடாது. மேலும், கிலோ மீட்டர் வருவாய், டயர் சேதம், ஸ்பிரிங் பட்டை சேதம் உள்ளிட்ட காரணங்களுக்காக மேலதிகாரிகளை சந்திக்குமாறு கூறி தொழிலாளர்களை அழைக்கழிக்கக்கூடாது. கிளை மேலாளர் உத்தரவின்படி மேலதிகாரிகளை சந்திக்க செல்லும் தொழிலாளர்களுக்கு நிலையாணை விதிகளின்படி வருகைப்பதிவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மண்டல துணைத்தலைவர் ஜே.முருகன் தலைமை வகித்தார். இதில், மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம், பொதுச்செயலாளர் சி.ரகுபதி, பொருளாளர் என்.மயில்சாமி, இணைச்செயலாளர்கள் வெங்கடாசலபதி, கே.பெருமாள், ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.