மாட்டு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு
27 May 2026, 11:38 pm

மாட்டு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு

தருமபுரி மே -27, தொப்பூர் வழியாக லாரிகளில் கொண்டு செல்லும் மாடுகளை தடுத்து பாதுகாவலர்கள் என்ற பெயரில் வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்வதை தடுக்க கோரி தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எஸ். பி. மகேஸ்வர னிடம் இடதுசாரிகள், விசிக மற் றும் இஸ்லாமிய அமைப்பினர் சார் பில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு ஆந்திரா, தெலுங் கானா கர்நாடகா போன்ற மாநிலங் களில் இருந்து வியாபாரிகள் மாடு களை குரு பாணி,வளர்ப்புமாடு, ஆகியவற்றிக்காக வியாபாரிகள் விலைபேசி லாரியில் மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்கின்ற னர்.

அப்போது தருமபுரி மாவட்டம் தொப்பூர் தோல்கேட்டில் லாரிகள் கடந்து செல்லும் போது பசு பாது காவலர்கள் என்ற பெயரில் வியா பாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பசுவதை செய்வதாக வழக்குபதிவோம் என மிரட்டி வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ் டம் ஏற்படுகிறது. தற்போது பக்ரித் பண்டிகைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளை மே -26 அன்று அதியமான் காவல் எல்லைக் குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலையில் பசு காவலர்கள் தடுத்து நிறுத்தி மாடுகளை கொடுமை படுத்தவதாக கூறி அதியமான் காவல்நிலையத்தில் மாட்டு லாரியை ஒப்படைத்தனர்.

இதன் பெயரில் லாரி உரிமையாளர் மற் றும் லாரி டிரைவர் கிளீனர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

சட்ட ரீதியாக கொண்டு செல்லப் படும் மாடுகளை வடமாநிலங்களில் நடைபெறுவது போன்று பசு காவ லர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பதும் காவல்துறையினருடன் கூட்டு சேர்ந்து நியாயமற்ற முறை யில் வழக்கு பதிவு செய்வதை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதில், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஏ. சிராஜூதின், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் என். சுபேதார் வழக்கறிஞர்கள் நூக் மான், பாசீல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கே. கோவிந்தசாமி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் சக்தி உள்ளிட்டோர் எஸ்பியிடம் மனு அளித்தனர்.