கடன் பிரச்சனை: மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரியில் மோதி தற்கொலை
2 Jul 2026, 1:49 am
<p><strong>கடன் பிரச்சனை: மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரியில் மோதி தற்கொலை</strong></p><p>தருமபுரி, ஜூலை 1- தருமபுரியில் கடன் தொல்லை யால் மனைவி, மகளை கொடூரமாக கொலை செய்த தொழிலதிபர், லாரி மீது மோதி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தருமபுரி, அன்னசாகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (45) என்பவர், கோட்டை கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்து டன் வசித்து வந்தார். ஆன்லைன் டிரே டிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு, கடந்த சில மாதங்களாக தொழிலில் கடுமையான நஷ்டமும், கடன் நெருக்கடியும் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். செவ்வாயன்று அதிகாலை, சந்தோஷ் தனது மனைவி சரண்யாவை (35) கழுத்தறுத்தும், மகள் சாத்தியாவை (14) எடைக்கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புற வடை அருகே சென்ற அவர், எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையிலான போலீசார், வீட்டில் உயிரிழந்திருந்த சரண்யா மற்றும் சாத்தி யாவின் உடல்களை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், புற வடை பகுதியில் உயிரிழந்த சந்தோ ஷின் உடலையும் அதியமான் கோட்டை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதற்கிடையே சந்தோஷ் இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ வில், கடன் தொல்லையால் என் தாய், மனைவி, மகளை கொல்ல துணிந்தேன்; தாயை கொல்ல முடியவில்லை. யாரும் தயவுசெய்து ஆன்லைன் டிரேடிங் செய்ய வேண்டாம், என உருக்கமாக பேசியுள்ளார்.</p>
