தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேருந்து நிலையத்தில் நாய்களால் பயணிகள் அச்சம்: கவுன்சிலர்கள் புகார்

5 Jun 2026, 10:29 pm
பேருந்து நிலையத்தில் நாய்களால் பயணிகள் அச்சம்: கவுன்சிலர்கள் புகார்
<p>தருமபுரி, ஜூன் 5-</p><p>தருமபுரி நகர பழைய பேருந்து நிலையத்தில் நாய்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி வருவ தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட் டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர். </p><p>தருமபுரி அறிஞர் அண்ணா நகர்மன்ற கூட்டரங்கில், கவுன் சிலர்கள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் வசந்தி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் மா.லட்சுமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த அலுவ லர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசு கையில், தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் நூற்றுக் கணக்கான நாய்கள் சுற்றித்திரிகின்றன. வயதானவர்கள், குழந்தைகளை கண்டால் கடிக்க வருகின்றன. குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பைகளை கீழே இழுத்து, நாய்கள் குதறி விடுகிறது. இதனால் தெருக்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய் களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 33 ஆவது வார்டுக்குபட்ட அண்ணா சாக ரம் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்து, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது மோட்டர் பழுதடைந்துள்ள தால், தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>ஏறங்காட்டு கொட்டாய் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது இப்பகுதி யில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். கொல்லஅள்ளி சாலையில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். 15 ஆவது வார்டில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பை நீக்கி, முறையாக சுத்தம் செய்ய வேண்டும், என்றனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆணையர் வசந்தி, கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். இதைத்தொடர்ந்து, 32 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.