தருமபுரி புத்தகத் திருவிழாவை அக்டோபரில் நடத்த முடிவு
13 Jul 2026, 12:20 am
<p><strong>தருமபுரி புத்தகத் திருவிழாவை அக்டோபரில் நடத்த முடிவு</strong></p><p>தருமபுரி, ஜூலை 12- தருமபுரி 8 ஆவது புத்தகத் திரு விழாவை அக்டோபர் மாதம் நடத்து வதென தகடூர் புத்தகப் பேரவை முடிவு செய்துள்ளது. தகடூர் புத்தகப் பேரவையின் செயற்குழு கூட்டம், தருமபுரி முத்து இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பேரவையின் தலை வர் இரா.சிசுபாலன் தலைமை வகித் தார். செயலாளர் இரா.செந்தில், ஒருங்கிணைப்பாளர் இ.தங்கமணி ஆகியோர் புத்தகத் திருவிழா பணிகள் குறித்து எடுத்துரைத்த னர். இக்கூட்டத்தில், மாவட்ட நிர் வாகத்துடன் இணைந்து தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகால யம் சார்பில் ஆண்டுதோறும் புத் தகத் திருவிழா தருமபுரியில் நடத்தப் பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் 8 ஆம் ஆண்டு புத் தகத் திருவிழாவை அக்டோபர் மாதம் நடத்துவது, மாவட்ட பொறுப்பு அமைச்சரை புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்க அழைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புத்தகத் திரு விழாவை ஒட்டி ஆயிரம் பேரிடம் ஆயிரம் ரூபாய் வீதம் புரவலர் நிதி யாக வசூலிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாணவர் களிடமும், பொதுமக்களிடமும் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக் கில் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திரு விழா நடத்துவதற்கு நிதி உதவிய ளித்து வந்தது. இந்த நிகழ்வுகள் அறிவியக்கமாக நடைபெற்று வரு கின்றன. ஆகவே, முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து மாவட்டங்களி லும் அரசு நிதி உதவியுடன் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும் என தகடூர் புத்தகப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில், பேரவையின் பொருளாளர் எம்.கார்த்திகேயன், நிர்வாகி நெ.த.அறிவுடைநம்பி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், ஆசிரியர் மா.பழனி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவ லர் சி.ராஜசேகரன், ஓய்வுபெற்ற தபால் துறை மாவட்ட கண்காணிப் பாளர் ஆர்.கே.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
