தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் பாயும் அவலம்!

7 Jun 2026, 12:20 am
பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி  விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் பாயும் அவலம்!

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் பாயும் அவலம்!

தருமபுரி, ஜூன் 6- தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக் கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தால், கழிவுநீரானது விவசாய நிலத் திற்குள் பாய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி நகராட்சி, 32 ஆவது வார்டுக்குட்பட்ட தண்டுபாதை தெரு மற்றும் கம்பன் தெருவில், முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால், அங் குள்ள வீடுகள் முன்பு மற்றும் விவசாய நிலங்களில் சாக்கடை கால்வாய் கழிவு நீர் தேங்கி வந்தது.

அங்குள்ள மக்களின் தொடர் கோரிக்கையால், கடந்தாண்டு, 200 மீட்டர் துாரத்திற்கு கழிவுநீர் கால் வாய் அமைக்கபட்டது.

மேலும், 30 மீட் டர் துாரத்திற்கு கால்வாய் அமைக்க வில்லை. இதனால் சாக்கடை கால் வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், கால்வாய் உயரம் குறைவாக அமைக்கப்பட்டதால், கழிவுநீர் விவ சாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக அருகி லுள்ள விவசாய நிலங்கள், கால்நடை கள் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கமலே சன் கூறுகையில், அன்னசாகரம் தண்டு பாதை கிராமத்தில், 2 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து கொண்டு, கால்நடை கள் வளர்த்து வருகிறேன்.

கடந்தாண்டு அமைக்கபட்ட சாக்கடை கால்வாய் உய ரம் குறைவாக அமைக்கபட்டதால், கழி வுநீர் எங்கள் விவசாய நிலம் வழியாக வெளியேறி வருகிறது. மேலும், சிறித ளவு மழை பெய்தால் கூட முழு கழிவுநீ ரும் எங்கள் நிலத்தில் தேங்கி நிற்கும் நிலை நீடித்து வருகிறது.

இதன் காரண மாக, இந்த பகுதியில் உள்ள மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படுறது. எனவே, இதனை தடுக்க சாக்கடை கால்வாயை உயரத்தை அதிகரித்து, கழிவுநீர் தேங் காதவாறு நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.