முந்தய பக்கம்

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி விதொச முற்றுகை

22 Jul 2026, 10:48 pm
மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி விதொச முற்றுகை
<p><strong>மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி விதொச முற்றுகை</strong></p><p>தருமபுரி, ஜூலை 22- தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அக்க டையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி ஊராட்சி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே மது பானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் என பலரும், நடந்தும் மற்றும் வாகனத்தில் செல்லவும் அச்ச மடைந்து வருகின்றனர். எனவே, இக்க டையை அகற்றக்கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலி யுறுத்தி வந்தது. ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், புதனன்று விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் புதனன்று அக்கடையை முற்று கையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். அதன்பேரில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வீரப்பன் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். முத்து, மாநிலக்குழு உறுப்பினர் தேசிங்கு, வட்ட நிர்வாகிகள் குமரேசன், தங்கராஜ், ஜெயகாந்தன், லெனின், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram