அடிப்படை வசதிகள் கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்
3 hours before
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 31-செல்லம்பட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள்செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சியில் பல ஆண்டு காலமாக வீடுகட்டி குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். செல்லம்பட்டிக்கு அரசு பேருந்து காலை 8 மணிக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் சுசித்திரா தலைமைவகித்தார்.இதில், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, வட்ட நிர்வாகிகள் குமரேசன், தங்கராஜ், வீரப்பன், ராமன், தேசிங்கு, தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சங்க தலைவர்கள் மனு அளித்தனர்.</p>
