மக்கள் வேதனைகளும், தீராத குடிநீர் பஞ்சமும்! தாகத்தில் தாராபுரம்
4 Oct 2026, 2:45 pm

மக்கள் வேதனைகளும், தீராத குடிநீர் பஞ்சமும்! தாகத்தில் தாராபுரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் தெற்குப் பகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் குடிநீர் பஞ்சமும், பாசன நீர் பற்றாக்குறையும் தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களத்தில் முதன்மையான மக்கள் அதிருப்தியாக உருவெடுத்துள்ளன.சந்திராபுரம் முதல் தளவாய்பட்டினம் வரையிலான கிராமப்புறங்களிலும், ஊத்துப்பாளையம், ரஞ்சிதாபுரம், செல்லாம்பாளையம் போன்ற பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. போதிய பருவமழை இல்லாததால் திறந்தவெளி கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட, பொதுமக்கள் வேறு வழியின்றி சுகாதாரமற்ற ஆழ்துளை கிணறு(போர்வெல்) தண்ணீரையே நம்பியிருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறுஉடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதோடு, குடிநீருக்காக புதிய போர்வெல்கள்அமைப்பதும் கிணறுகளை ஆழப்படுத்துவதுமே அவர்களின் அன்றாட போராட்டமாகமாறியுள்ளது.

மேற்கு மண்டலத்தின் பாரம்பரிய நெற்களஞ்சியமாக விளங்கிய தாராபுரம், ஆட்சியாளர்களின் கவனம் பெறாததால் அரை நூற்றாண்டு காலம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. குடிநீர் பஞ்சம் ஒருபுறமிருக்க, பாசன நீர் கிடைக்காமல் ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்கள் வெடித்து காய்ந்து காணப்படுகின்றன. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் பாசன கால்வாய்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதால், அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சென்று சேர்வதில்லை. ஏற்கனவே உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான விலை உயர்வு, உயர்த்தப்பட்ட தொழிலாளர் கூலி மற்றும் சாகுபடி செலவுகளால் முடங்கியுள்ள விவசாயிகளுக்கு இந்நீர் பற்றாக்குறை பேரிடியாக அமைந்துள்ளது. தடையற்ற மின்சாரம் மற்றும்அறுவடை செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத சூழலில், பயிர்கள் காய்ந்து போவது அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

விவசாயம் மட்டுமின்றி, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதார கட்டமைப்புகளும் வெகுவாக முடங்கிக் கிடக்கின்றன. ஊரக

வேலை உறுதித் திட்டத்தில் முறையான வேலை வழங்கப்படாமை, முதியோர் உதவித்தொகை நிறுத்தம் மற்றும் கிராமப்புறங்களுக்கு முறையான அரசுப் பேருந்து வசதியின்மை ஆகியவை ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன. அதேவேளையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், இலவச பயிற்சி மையங்கள் அமைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்ககளை தீவிரப்படுத்துதல் ஆகியவையே அப்பகுதி பெண்களின் முதன்மை எதிர்பார்ப்பாகஉருவெடுத்துள்ளன.

வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயேமக்கள் பிரதிநிதிகள் ஆளுங்கட்சிக்குத் தாவிய அரசியல் சுயலாப நடவடிக்கையையும், தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ‘குதிரைப் பேர’ அரசியலையும், பண விநியோகம்தொடர்பான பேச்சுக்களையும் தங்களால் ஏற்கவே முடியவில்லை என கிராம மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர். திமுக, அதிமுக மற்றும்தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் மக்களின்அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளை பேசாமல், பரஸ்பர அரசியல் விமர்சனங்களிலும் தேர்தல் பேரங்களிலுமே கவனம் செலுத்தி தேர்தல் களத்தை திசைதிருப்புவதாக விமர்சனம் எழுகிறது.

இச்சூழலில், தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் ப.லட்சுமணன் மட்டுமே அதிகார பலம், பண பலம்எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உண்மையான வாழ்வாதார பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ”தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளாக பேசுவது ஜனநாயகமல்ல; தாராபுரம் தொகுதியின் குடிநீர், பாசனநீர், மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதே தங்களின் ஒரே எதிர்பார்ப்பு” என தாராபுரம் தெற்குப் பகுதி கிராம மக்கள் திட்டவட்டமாகதெரிவிக்கின்றனர்.

-மகாதேவன்