தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங். வெற்றி

9 Oct 2026, 10:40 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங். வெற்றி

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங். வெற்றி

சென்னை, அக். 9 -மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் தவெக வெற்றிபெற்றுள்ளது.இவ்விரு தொகுதிகளுக்கும், அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வெள்ளிக் கிழமை (அக்.9) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகளும், பின்னர்

8.30 முதல் இவிஎம் வாக்குகளும் எண்ணப்பட்டன. மதுராந்தகத்தில் 21 சுற்று களாகவும், தாராபுரத்தில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட்டன.

மதுராந்தகம்

இதில், மதுராந்தகத்தில் 21 சுற்றுகள் முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 19,241 வாக்கு வித்தி

யாசத்தில் வெற்றி பெற்றார். அவர், 70,916 வாக்குகளும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 51,675 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 46,431 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்தி 1986 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 2,709 வாக்குகளைப் பெற்றார்.

தாராபுரம்

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா, 9,471 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்

66,841 வாக்குகளையும், திமுக வேட்பா

ளர் சுகன்யா 57,370 வாக்குகளையும் பெற்றனர்.

அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ப. லட்சுமணன் 1,157 வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் கார்த்திகா 5,273 வாக்குகள் பெற்றார்.

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் சட்டமன்றத்தில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

தட்டாஞ்சாவடி

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த், தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகத்தை 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். விநாயகம் 4,876 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக வேட்பாளர் சேது செல்வம் 2,664 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் 310 வாக்குகளும் பெற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.