தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம் நகரம், பேரூராட்சி, ஒன்றிய அளவில் இடதுசாரிகள் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பு

22 Sept 2026, 11:54 pm
தாராபுரம் நகரம், பேரூராட்சி, ஒன்றிய அளவில்  இடதுசாரிகள் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பு

தாராபுரம் நகரம், பேரூராட்சி, ஒன்றிய அளவில் இடதுசாரிகள் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பு

திருப்பூர், செப்.22-தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் நகரம், பேரூராட்சிகள், ஒன்றியங்கள் அளவில் இடதுசாரிகள் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிஇடைத்தேர்தலில் இடதுசாரிகள் அணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் பி.லட்சுமணன் போட்டியிடுகிறார். வேட்பு மனுத் தாக்கல் முடிந்த நிலையில் கடந்த 19ஆம் தேதிதாராபுரம் தொகுதி தேர்தல் பணிக்குழு பாலாஜி திருமண மண்டபம் தியாகிகள் நினைவரங்கில் நடைபெற்றது. இதில்தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக இசாக், பணிக்குழு செயலாளராக என்.கனகராஜ், பொருளாளராக எம்.மோகன் உள்ளடக்கிய 50பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக வேட்பாளர் பி.லட்சுமணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், ஊழியர்களுடன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கியஅமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவுதிரட்டினார்இந்நிலையில், தொகுதி தேர்தல் பணிக்குழுவின் கூட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு அலுவலக கட்டிடத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் எஸ்.பவித்ராதேவி, கி.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பஞ்சலிங்கம், தாராபுரம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் பழனிச்சாமி, சி.சுப்பிரமணியன், என்.கிருஷ்ணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் உள்பட தேர்தல் பணிக்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய தேர்தல் பணிக்குழுக்கள், நகர தேர்தல்பணிக்குழு மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் பணிக்குழுக்கள் என தனித்தனியாக அமைக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து செவ்வாயன்று மாலை வேட்பாளர் பி.லட்சுமணனுக்கு ஆதரவாக இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் தாராபுரம்நகரின் முக்கிய பகுதிகளில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.