மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி: சிதறிய நெல்மணிகள்
yesterday
<p><strong>மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி: சிதறிய நெல்மணிகள்</strong></p><p>திருப்பூர், ஜூன் 21- தாராபுரம் பேருந்து நிலைய மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி ஒன்று தலை கீழாக கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில், லாரியிலி ருந்த 10 டன் நெல் மூட்டைகள் சாலையில் சிதறியதுடன், டீசல் டேங்க் உடைந்து எரி பொருள் ஆறு போல் வழிந் தோடியதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், எல்லையபுரம் பகுதியிலிருந்து திருவாடனையை சேர்ந்த ராமு (48) என்பவர், லாரியில் நெல் மூட்டை களை ஏற்றிக்கொண்டு, திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலுள்ள ஒரு தனியார் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, ஞாயிறன்று தாராபுரம் பேருந்து நிலைய மேம்பாலத்தின் மேலே லாரி ஏறிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்புச்சுவர் மீது பலத்த சத்தத்துடன் மோதி, சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்த சுமார் 10 டன் நெல் மூட்டைகள் அனைத்தும் சாலையில் கிழிந்து விழுந்து, நெல் மணிகள் சிதறின. ஓட்டுநர் ராமு லேசான கால் காயங்களு டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், லாரியின் டீசல் டேங்க் முற்றிலும் உடைந்து, அதிலிருந்த டீசல் சாலை முழு வதும் ஆறு போல வழிந்தோடியது. ஏதே னும் சிறு பொறி பட்டாலும் தீப்பிடிக்கும் அபா யம் ஏற்பட்டதால், அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். உடனடி யாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் லாரியை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். இதற்காக, தாராபுரம் நான்கு வழிச்சாலையின் ஒருவழிப்பாதை முற்றிலும் தடைப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழ்நிலையும் காணப் பட்டது. இவ்விபத்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
