கம்பூனிஸ்ட் வேட்பாளருக்கு மக்கள் பெரும் வரவேற்பு
4 Oct 2026, 2:36 pm

கம்பூனிஸ்ட் வேட்பாளருக்கு மக்கள் பெரும் வரவேற்பு

தாராபுரம் தொகுதியில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப. லட்சுமணனுக்கு, தொகுதியின் அனைத்து ஒன்றிய கிராமப்புற பகுதிகளிலும், பேரூராட்சி மற்றும் நகரப் பகுதியிலும் பரவலாக மக்கள் ஆதரவுஉள்ளதை களத்தில் பேசும் போது தெரிந்து கொள்ள முடிந்தது.தாராபுரம் நகரம், மூலனூர், கன்னிவாடி, வேலாம் பூண்டி, கல்லமடை புதூர், குண்டடம் ஒன்றியம் நந்தவனம் பாளையம், வெள்ளம்பட்டி, கெத்தல் ரேவ், ஜோதியம்பட்டி, புங்கத்துறை, சின்னக்கம்பாளையம் பேரூராட்சி, சோமனூத்து, கொளத்துபாளையம் பேரூராட்சி, கொக்கம்பாளையம் என தொகுதியின் நாலாவதுதிசைகளிலும் உள்ளஊர்களில் பொதுமக்களிடம் நடைபெறக்கூடிய தேர்தல் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. மிகப்பெரும்பான்மையானோர் கூறுகையில், தாராபுரம் தொகுதியில் பொதுத்தேர்தலில் அதிமுகசார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறி, ஆளுங்கட்சிவேட்பாளராக மீண்டும் போட்டியிடுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது என்று தெரிவித்தனர்.

வேட்பாளரை மாற்றி இருந்தால் கூட ஆளுங்கட்சியை யோசிக்கமுடியும். சத்தியபாமாவையே நிறுத்தி இருப்பதால் அவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு கிராமப்புற மக்கள்தெரிவித்தனர். அதேபோல் திமுக உட்பட பலரும் வெளியூர் காரர்களை கொண்டு வந்து வாக்கு கேட்கின்றனர். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் போய் விடுவார்கள். எங்களுக்கு தொடர்ந்து உள்ளூரில் உதவி செய்பவர்கள் முக்கியம் என்று வேலாம்பூண்டி மக்கள் கூறினர்.மூலனூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாத காலமாக ஆட்சியில் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரை வீடுமேல் கூரை பொரிந்து கீழே விழுகிறது. தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளன. இது பற்றி மின்வாரியத்தினரிடம் கூறினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். அதேசமயம் கம்யூனிஸ்ட் கட்சியினர் கதிர் அரிவாள் சின்னத்தில் தனியாக போட்டியிடுவது கிராமப்புற மக்களுக்குதெளிவாக தெரிகிறது. குறிப்பாக மூலனூர் பகுதிகளில் கடந்த காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், முற்போக்கு இளைஞர் அமைப்புகளில் செயல்பட்டவர்கள், இடதுசாரிகள் தனியாக போட்டியிடுவதால், அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று உற்சாகமாக தெரிவித்தனர்.

தாராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களுக்காககம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வீட்டுமனை பட்டா, நிலப் பிரச்சனை, குடிநீர், போக்குவரத்துஆகியவற்றுக்காக போராடியுள்ளனர். எனவே இந்த தொகுதியில் வேறு எந்த கட்சியுடனும் சேராமல் தனித்து நிற்பதால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்று அப்பகுதி மக்கள் கூறினர். மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கிராமப்புற பகுதியில்விஜய் கட்சிக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. அதேசமயம் இப்பகுதியில் கம்யூனிஸ்டுகள் கணிசமாக வாக்கு வாங்குவார்கள் என்று அப்பகுதி பெண்கள் கூறினார்.

தாராபுரம் நகரப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்லட்சுமணன் வாக்கு கேட்டு செல்லும்போது, ஏழ்மை நிலையிலுள்ளஒரு பெண்மணி அவரை எனது வீட்டுக்கு உள்ளே வந்துபாருங்கள் என்று கண்கலங்க கூறினார். மிகவும் சிறிய வீட்டில் அடிப்படை வசதிகள்இல்லாமல் இருக்கிறோம். யார் யாரோ வந்துபார்த்து செல்கிறார்கள். ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் எங்கள் பிரச்சினையைகாது கொடுத்துகேட்பதில்லை. நீங்கள் தான் எங்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள். வீடு இருக்கும் நிலையில் நாங்கள் எப்படி நிம்மதியாக வாழ்வது என்று கேட்டார். வேட்பாளர் லட்சுமணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றாலும், இல்லாவிட்டாலும் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி வீட்டுமனை பட்டா வாங்கித்தர முயற்சி செய்வேன். நியாயமான கோரிக்கையை ஏற்காவிட்டால் போராடிபெற்று தருவேன் என்று அந்தப் பெண்மணியிடம் கூறினார். தொகுதியை வலம் வரும்போது பல்வேறு பகுதிகளிலும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு கேட்டு கிராமப்புறங்களில் வீடு வீடாக மக்களை சந்தித்துள்ளனர். எங்கள் பகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு ஓட்டு கேட்டுவந்தனர். இம்முறை நாங்கள் அவர்களுக்கு ஓட்டு போடுவோம் என்று ஆங்காங்கே பரவலாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

மக்களின் பார்வை கம்யூனிஸ்டுகளை கனிவோடு கவனிக்கின்றனர் என்பதை அறிய முடிந்தது. எனவே தாராபுரம் தொகுதியில் தாராபுரம் நகரம் மட்டுமின்றி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என தொகுதி முழுவதும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பரவலான மக்கள் ஆதரவு இருப்பதை காண முடிந்தது.

-தூயவன்