தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணிக் குழு அமைப்பு!

19 Sept 2026, 11:44 pm
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணிக் குழு அமைப்பு!

தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணிக் குழு அமைப்பு!

திருப்பூர், செப். 19 -தாராபுரம் தொகுதியில் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ப. லட்சுமணன்போட்டியிடும் நிலையில், சனிக்கிழமையன்று வேட்பாளர் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம். இஷாக் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தாராபுரம் தொகுதி முழுவதும் இருந்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) கட்சிகளின் ஊழியர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிபிஐ மாநிலத் துணைச் செயலாளர் எம். ரவியைத் தலைவராகவும், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜை செயலாளராகவும், சிபிஐபுறநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம். மோகனை பொருளாளராகவும், மற்றும் மூன்று கட்சிகளின் நிர்வாகிகளைக் கொண்ட மூன்று துணைத் தலைவர்கள், மூன்று துணைச் செயலாளர்கள் உட்பட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த பணிக்குழு, தேர்தல் பணிதொடர்பாக மேலும் பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி தாராபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் பணிகளை சிறப்பாக முன்னெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், வேட்பாளர் ப. லட்சுமணன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர் கே. சுப்பராயன் எம்.பி., சிபிஎம்மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, சிபிஐ(எம்எல்)லிபரேசன் மாநில நிலைக்குழு உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே. முத்துகிருஷ்ணன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ், சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர்கள் எம். மோகன், பி. நதியா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பவித்ரா உள்ளிட்டோர் உரையாற்றினர். சிபிஎம் தாராபுரம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஆர். வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.