புறவழிச்சாலையை சீரமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
10 Oct 2026, 3:06 am
<p><strong>புறவழிச்சாலையை சீரமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை</strong></p><p>தாராபுரம், அக்.9-தாராபுரம் புறவழிச்சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு வரும் சூழலில், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயகவாலிபர் சங்க உடுமலை நகரக்குழு வலியுறுத்தியுள்ளது.தாராபுரம் புறவழிச்சாலையில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களைத் தவிர்க்க முயற்சிக்கும்போது வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறும் சாலையில் இத்தகைய பாதிப்புநீடிப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பெரும்அச்சுறுத்தலாக உள்ளது.</p><p>சாலைப் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டப்படுவதால், வாகன ஓட்டிகள்அன்றாடம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துகள் மேலும் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படும் முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு, தாராபுரம் பைபாஸ் சாலையை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். மேலும், சாலை பராமரிப்புப் பணிகளை தாமதமின்றி மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
