தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரிகள் வேட்பாளர் பி.லட்சுமணன் வேட்புமனு தாக்கல்
1 hour before
<p>இடதுசாரிகள் வேட்பாளர் பி.லட்சுமணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.லட்சுமணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>தாராபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பெலிக்ஸ் ராஜாவிடம் அவர் தனது வேட்புமனுவை முறைப்படி அளித்தார்.</p><p>இந்நிகழ்வின் போது திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
