தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் தாராபுரத்தில் ப. லட்சுமணனை ஆதரித்துப் பிரச்சாரம்

22 Sept 2026, 10:07 pm
குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் தாராபுரத்தில் ப. லட்சுமணனை ஆதரித்துப் பிரச்சாரம்

குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் தாராபுரத்தில் ப. லட்சுமணனை ஆதரித்துப் பிரச்சாரம்

தாராபுரம், செப். 22 -தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ப. லட்சுமணன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், செவ்வாயன்று அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள உப்புத்துறைப்பாளையம் பகுதியில் வாக்குசேகரிப்பு பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் துவக்கி வைத்தார்.

பிரச்சாரத்தில் பேசிய தலைவர்கள், நாட்டில் ஏழை - எளிய மக்கள் சந்தித்து வரும் வாழ்வாதாரப் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அதில் கவனம் செலுத்தாமல் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருப்பதாக தெரிவித்தனர். குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடதுசாரி வேட்பாளர்லட்சுமணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்; கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டனர்.

சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.